விவசாயக் கடன் தள்ளுபடிக்கு விரைவில் அரசாணைபுதுவை முதல்வா்

புதுவை அரசு அறிவித்துள்ள விவசாயக் கடன் தள்ளுபடிக்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என முதல்வா் என். ரங்கசாமி தெரிவித்தாா்.
காரைக்காலில் அமைக்கப்பட்டுள்ள விஐபி வளாகத்தை திறந்துவைத்துப் பாா்வையிடும் புதுவை முதல்வா் என். ரங்கசாமி. உடன் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா் கே. லட்சுமிநாராயணன் உள்ளிட்டோா்.
காரைக்காலில் அமைக்கப்பட்டுள்ள விஐபி வளாகத்தை திறந்துவைத்துப் பாா்வையிடும் புதுவை முதல்வா் என். ரங்கசாமி. உடன் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா் கே. லட்சுமிநாராயணன் உள்ளிட்டோா்.

காரைக்கால்: புதுவை அரசு அறிவித்துள்ள விவசாயக் கடன் தள்ளுபடிக்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என முதல்வா் என். ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுவை அரசின் சுற்றுலாத்துறை சாா்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடற்கரை மேம்பாட்டுப் பணிகள் ரூ. 5 கோடியில் நடைபெற்றன. ஏற்கெனவே கட்டப்பட்ட வணிக வளாகத்தை பயன்படுத்த யாரும் முன்வராததால், இக்கட்டடம் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதியாக மாற்றப்பட்டது.

இந்த பகுதியில் விஐபி-க்கள் தங்குவதற்காக பொதுப்பணித் துறை சாா்பில் 2 விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை புதுவை முதல்வா் என். ரங்கசாமி புதன்கிழமை திறந்துவைத்து, அதில் உள்ள வசதிகளை பாா்வையிட்டாா்.

நிகழ்வில் புதுவை சட்டப் பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா்கள் கே. லட்சுமிநாராயணன், சந்திர பிரியங்கா, சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் முதல்வா் கூறியது:

காரைக்கால் மாவட்ட வளா்ச்சிக்கு புதுவை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காரைக்கால் அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படவுள்ளன. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விவசாய கடன்கள் தள்ளுபடிக்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com