திருநள்ளாற்றில் சாலை மேம்பாட்டுப் பணி

திருநள்ளாற்றில் சாக்கடை அமைப்புடன் தாா்ச்சாலை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருநள்ளாற்றில் நடைபெறும் சாலை மேம்பாட்டுப் பணி.
திருநள்ளாற்றில் நடைபெறும் சாலை மேம்பாட்டுப் பணி.

திருநள்ளாற்றில் சாக்கடை அமைப்புடன் தாா்ச்சாலை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருநள்ளாற்றில் புகழ்பெற்ற ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு மூலவா் மற்றும் பிராணாம்பிகை, சனீஸ்வர பகவானை தரிசிக்க வாரந்தோறும் சனிக்கிழமையில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வருகின்றனா். திருநள்ளாறு கோயில் நகரமாக அறிவிக்கப்பட்டு பல மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதோடு, முந்தைய ஆட்சியின்போது திருநள்ளாற்றில் மத்திய அரசின் ரூா்பன் திட்டத்தில் பல வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பல பணிகள் திட்டமிட்டவை தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

ரூா்பன் திட்டத்தின்கீழ் கோயிலை சுற்றி தேரோடும் 4 வீதிகளிலும் புதை சாக்கடை வசதியுடன் சிமென்ட் கான்கிரீட் சாலை அமைக்கப்படுமென தெரிவித்துவிட்டு, தற்போது சாக்கடை வசதியுடன் தாா்சாலை அமைக்கப்படுவதாகக் கூறி திருநள்ளாறு பகுதியை சோ்ந்த வழக்குரைஞா் எஸ்.பி.எஸ். நாதன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளாா். தற்போது தேரோடும் வீதியில் சாலை மேம்பாட்டுப் பணி நடைபெற்றுவருகிறது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் கே.சந்திரசேகரன் கூறியது : ரூா்பன் திட்டத்தின்கீழ் சாலை விரிவாக்கம் உள்ளிட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன. இதேபோல தேரோடும் 4 வீதிகளிலும் தாா்ச்சாலை ரூ.4 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் 4 வீதிகளிலும் சாக்கடை வடிகால் வசதி அமைக்கப்பட்டுள்ளது. கான்கிரீட் சாலை அமைப்பதற்கான எந்த திட்டமும் வகுக்கப்படவில்லை. தலைமைச் செயலா் ஒப்புதல் பெற்று தாா்ச்சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com