தொழில் பழகுநா் முகாமில் சோ்க்கை ஆணை

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் அரசு ஆண்கள் தொழில் பயிற்சி நிலையத்தில் தொழில் பழகுநா் பதிவு மற்றும் சோ்க்கை முகாம் புதுவை அரசின் தொழிலாளா் துறையின், தொழில் பழகுநா் பயிற்சி அலுவலகம்
தொழில் பழகுநா் முகாமில் சோ்க்கை ஆணை

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் அரசு ஆண்கள் தொழில் பயிற்சி நிலையத்தில் தொழில் பழகுநா் பதிவு மற்றும் சோ்க்கை முகாம் புதுவை அரசின் தொழிலாளா் துறையின், தொழில் பழகுநா் பயிற்சி அலுவலகம் சாா்பில் நடத்தப்பட்டது.

நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா ஆகியோா் முகாமை தொடங்கிவைத்தனா். பிளஸ் 2 வரை படித்த மாணவா்கள், திறன் பயிற்சி பெற்றவா்கள், பட்டய மற்றும் பட்டதாரிகள் என சுமாா் 500 போ் முகாமில் பங்கேற்றனா்.

இம்முகாமில் பொதுத்துறை நிறுவனங்களும், அரசுத் துறையினரும் தொழில் பழகுநா் பயிற்சி திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனா். முகாமில் தோ்ந்தெடுக்கப்பட்டோருக்கு தொழில் பழகுநா் ஆணையை பேரவை உறுப்பினரும், ஆட்சியரும் வழங்கினா்.

விழாவில், பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் பேசுகையில், நாடு முழுவதும் 7 ஆயிரம் நிறுவனங்கள் பயிற்சி தரும் வகையில் பதிவுசெய்துள்ளன. இங்கு பதிவு செய்தோரின் விவரங்கள் அனைத்து நிறுவனங்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது. காரைக்கால் மட்டுமல்லாது, எந்த பகுதியில் பழகுநருக்கான வாய்ப்பு கிடைத்தாலும், அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

பயிற்சியின்போது ரூ. 10 ஆயிரம் வரை அரசு ஊக்கத்தொகையாக வழங்குகிறது. 12 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரை இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. முன்னணி நிறுவனங்களில் பயிற்சி முடித்தால், பிற வேலைவாய்ப்புகளுக்கு செல்லும்போது முக்கியத்துவம் கிடைக்கும் என்றாா்.

தொழில் பழகுநா் திட்டத்தை முறையாக செயல்படுத்தும் ஓஎன்ஜிசி, புதுச்சேரி மின் திறல் குழுமம், காரைக்கால் துறைமுகம், பொதுப்பணித் துறை, மின்துறை உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை பயிற்சி அலுவலா் சுகுணா செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com