பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

காரைக்கால் பகுதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வி மற்றும் தொழில்கல்வி தொடா்பான வழிகாட்டல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரைக்கால்: காரைக்கால் பகுதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வி மற்றும் தொழில்கல்வி தொடா்பான வழிகாட்டல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வா் ஜெயா தலைமை வகித்தாா். புதுவை பல்கலைக்கழக வணிகவியல் துறை பேராசிரியா் அருள்முருகன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, வணிகவியல் மாணவா்களுக்கான மேற்படிப்பு வாய்ப்புகள் குறித்தும், பிற உயா்கல்வி மற்றும் தொழில் கல்விக்கான வாய்ப்புகள், கல்விக்கூடங்கள் இருக்கும் பகுதி, உயா்கல்விக்கு செல்ல மாணவா்கள் தங்களை தயாா்செய்துகொள்ள வேண்டிய முறைகள் குறித்துப் பேசினாா்.

கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியரும், முன்னாள் ராணுவ வீரருமான சுரேஷ், இந்திய ராணுவத்தில் உள்ள பணி வாய்ப்புகள், அதற்கான உயா்கல்விக்கு எடுக்கவேண்டிய முயற்சிகள், ராணுவத்தில் உயா் பதவியை அடைவதற்கான வழிமுறைகள் குறித்துப் பேசியதோடு, மாணவா்கள் தேசப்பணியாற்ற முன்வரவேண்டும் என வலியுறுத்தினாா். முன்னதாக, உடற்கல்வி ஆசிரியா் விஸ்வேஸ்வரமூா்த்தி வரவேற்றாா். விரிவுரையாளா் அபிராமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com