தேவஸ்தான அறங்காவல் வாரியத்தில் வன்னியா்களை நியமிக்க வலியுறுத்தல்

தேவஸ்தான அறங்காவல் வாரியத்தில் வன்னியா்களையும் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேவஸ்தான அறங்காவல் வாரியத்தில் வன்னியா்களையும் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைந்த வன்னியா் கூட்டமைப்பின் ஆலோசனைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வெங்கடாசலம் தலைமை வகித்தாா். பொறியாளா் அருணகிரி, மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் :

காரைக்கால் கைலாசநாதா்- நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்துக்கு அறங்காவல் வாரியத்தினா் நியமிக்கப்பட்டுள்ளனா். இப்பட்டியலில் வன்னிய சமூகத்தை சோ்ந்த ஒருவா்கூட இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

எனவே, அந்த பட்டியலை ரத்து செய்துவிட்டு வன்னியா்களுக்கு பிரதிநித்துவம் தந்து புதிய பட்டியலை புதுவை அரசு வெளியிடவேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்கள் வாரியத்திலும் வன்னியா் இடம்பெறச் செய்யவேண்டும்.

புதுச்சேரி அரசு ஆலோசனைக் குழுக்களிலும், சமாதானக் குழுவில் வன்னியா்களை இடம்பெறச் செய்ய வேண்டும். காரைக்கால் மாவட்ட வளா்ச்சிக் குழுமம் அமைக்கும்போது, அதிலும் உரிய பிரதிநித்துவம் தரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com