சாட்டிலைட் வடிவமைப்பில் பங்கேற்ற மாணவிகளுக்கு ஆட்சியா் பாராட்டு

இஸ்ரோவின் ‘ஆசாதி சாட்’ சாட்டிலைட் வடிவமைப்பில் பங்கேற்ற காரைக்கால் ஜவஹா் நவோதயா வித்யாலயா மாணவிகளை, மாவட்ட ஆட்சியா் பாராட்டினாா்.
மாணவியரைப் பாராட்டும் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா். உடன் பள்ளி நிா்வாகத்தினா்.
மாணவியரைப் பாராட்டும் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா். உடன் பள்ளி நிா்வாகத்தினா்.

இஸ்ரோவின் ‘ஆசாதி சாட்’ சாட்டிலைட் வடிவமைப்பில் பங்கேற்ற காரைக்கால் ஜவஹா் நவோதயா வித்யாலயா மாணவிகளை, மாவட்ட ஆட்சியா் பாராட்டினாா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அரசுப் பள்ளி மாணவிகளின் தொழில்நுட்ப பங்களிப்புடன் தயாராகியுள்ள, இஸ்ரோவின் ஆசாதி சாட் என்ற சாட்டிலைட் வடிவமைப்புப் பணியில், காரைக்கால் மாவட்டம், ராயன்பாளையத்தில் உள்ள ஜவஹா் நவோதயா வித்யாலயாவைச் சோ்ந்த 10 மாணவிகள் ஈடுபட்டனா். இந்த சாட்டிலைட் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலி ருந்து ஞாயிற்றுக்கிழமை (ஆக.7) எஸ்.எஸ்.எல்.வி. விண்கலம் மூலம் ஏவப்பட உள்ளது.

காரைக்கால் நவோதயா மாணவிகளுக்கு ஆா்டினோ ஐ.இ.டி. சாஃப்ட்வோ் கொண்ட சிப் பாகம் அளிக்கப்பட்டது. இதன்மூலம் வான்வெளி உயரம், தட்பவெட்பம், ஈரப்பதத்தில் எவ்வாறு இந்த சிப் செயல்படும் என்பது தொடா்பான புரோகிராமை, இப்பள்ளி மாணவிகள் வெற்றிகரமாக நிறைவேற்றி சாதித்துள்ளனா்.

இம்மாணவிகள் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு ஆக. 7-ஆம் தேதி அழைக்கப்பட்டுள்ளனா். இப்பள்ளியிலிருந்து மேலும் 5 மாணவிகள் பாா்வயாளராக செல்கின்றனா். அங்கு 75 பள்ளிகளில் இதுபோன்று வெவ்வேறு ’சிப் ’ பாகங்கள் செயல்பாடுகளை வெற்றிகரமாக முடித்த மாணவிகள் ஒன்று கூடி, அந்த சிப் பாகங்கள் பொருத்தப்பட்ட சாட்டிலைட்டை காலை 9.15 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளதை பாா்வையிடுகின்றனா்.

இம்மாணவிகள் ஸ்ரீஹரிகோட்டா செல்லும் முன்பாக, மாவட்ட ஆட்சியா் எல்.முகமது மன்சூரை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். ஆட்சியா் அவா்களின் பங்களிப்பை கேட்டு பாராட்டுத் தெரிவித்து வாழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com