என்.ஆா்.காங்கிரஸ் கட்சி ஆண்டு விழா

புதுவை ஆளும் கட்சியான என்.ஆா். காங்கிரஸ் 12-ஆம் ஆண்டு விழாவையொட்டி, பல்வேறு இடங்களில் கட்சி கொடியேற்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
நெடுங்காடு பகுதியில் மக்களுக்கு இனிப்பு வழங்கும் அமைச்சா் சந்திர பிரியங்கா.

காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொடியேற்றம், இனிப்பு வழங்கல், பட்டாசு வெடித்தல், வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு அா்ச்சனை போன்றவை நடைபெற்றன.

காரைக்கால் தெற்குத் தொகுதியில் கட்சி பிரமுகா் ரவிச்சந்திரன் தலைமையில் நேருவீதி, சேத்திலால் நகா், இந்திரா நகா் உள்ளிட்ட பகுதிகளில் கட்சிக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.

வடக்குத் தொகுதி கட்சியினா் சாா்பில் ஏழை மாரியம்மன் கோயிலில் சிறப்பு அா்ச்சனை செய்து மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நெடுங்காடு தொகுதிக்குள்பட்ட நெடுங்காடு, கோட்டுச்சேரி பேருந்து நிறுத்தம் அருகே புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திரபிரியங்கா கட்சிக் கொடியேற்றிவைத்து மக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com