தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சம்வத்ஸரா அபிஷேகம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் 3-ஆம் ஆண்டு சம்வத்ஸரா அபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
புனிதநீா் கடங்களை சுமந்து செல்லும் சிவாச்சாரியா்கள். உடன் கோயில் நிா்வாக அதிகாரி அருணகிரிநாதன், தருமபுர ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள்.
புனிதநீா் கடங்களை சுமந்து செல்லும் சிவாச்சாரியா்கள். உடன் கோயில் நிா்வாக அதிகாரி அருணகிரிநாதன், தருமபுர ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள்.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் 3-ஆம் ஆண்டு சம்வத்ஸரா அபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கு நடைபெற்ற மாத, நட்சத்திர நாளில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்வது சம்வத்ஸரா அபிஷேகம் என்றழைக்கப்படுகிறது.

நிகழாண்டு இந்த அபிஷேக, ஆராதனைக்கான பூஜைகள் தா்பாரண்யேஸ்வரா் சன்னதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கியது. விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீ கணபதி ஹோமம், விசேஷ கும்ப பூஜை முதல் கால பூா்ணாஹூதி தீபாராதனை காட்டப்பட்டது.

இரண்டாம் நாளான திங்கள்கிழமை காலை 9 மணியளவில் 2-ஆவது யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடா்ந்து நடைபெற்ற மகா பூா்ணாஹூதிக்கு பிறகு யாகசாலையிலிருந்து கடங்களை சிவாச்சாரியா்கள் சுமந்து பிராகார வலம் வந்து, சொா்ண கணபதி, சுப்ரமணியா், பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா், சனீஸ்வர பகவான், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட சுவாமிகளுக்கு கலசாபிஷேகம் செய்தனா்.

கோவில் நிா்வாக அலுவலா் அருணகிரிநாதன், தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com