காரைக்காலில் நெல் அறுவடை தொடங்கியது

காரைக்கால் மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளன.
காரைக்காலில் நெல் அறுவடை தொடங்கியது

காரைக்கால் மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளன.

காரைக்கால் மாவட்டத்தில், சுமாா் 5 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி கடந்த 2021-ஆம் ஆண்டு தொடங்கியது. காவிரி நீா் வரத்து முறையாக இருந்ததும், உரிய சமயத்தில் மழையும் சாதகமான சூழலை ஏற்படுத்தியது. இதனால், மழையை பயன்படுத்தி விவசாயிகள், பொங்கல் விழாவுக்குப் பின் அறுவடைப் பணியை தொடங்கியுள்ளனா். இதுகுறித்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை கூறியது:

காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு காலக்கட்டத்தில் விவசாயிகள் விதைப்பு செய்தனா். எனினும், அறுவடை தை மாதத்தில் நடைபெறும் வகையில் பயிா் தயாராகியுள்ளது. அறுவடை செய்யும் நெல்லை உடனடியாக விற்பனை செய்யவேண்டும். வேளாண் கடன் தள்ளுபடியை அரசு இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. விவசாயிகள் கூடுதல் கடன் பெற்று விவசாயம் செய்துள்ளபோது, கொள்முதல் நிலையம் இல்லாததால் தனியாரிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்கும் அவலம் நீடிக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. எனவே, உடனடியாக கொள்முதல் நிலையத்தை புதுவை அரசு திறக்கவேண்டும் என்றனா்.

இதுகுறித்து காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் ஜெ. செந்தில்குமாா் கூறியது:

காரைக்காலில் அறுவடை பணிகள் தொடங்கினாலும், மாறுபட்ட காலத்தில் விதைப்பு செய்ததால் பிப்ரவரி மாதத்தில் அறுவடை தீவிராக இருக்கும். இந்திய உணவுக் கழகம் மூலம் மாவட்டத்தில் 2 இடங்களில் நெல் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இ-நாா்ம் என்ற ஆன்லைன் முறையில் இப்பணி நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இந்த நடைமுறை நிகழாண்டு பயன்பாட்டுக்கு வந்துவிட்டால், அடுத்த 3 ஆண்டுகள் வரை குறித்த சீசனில் கொள்முதல் பணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. பிப்ரவரி 1, 2 தேதிகளில் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் வகையில் பல கட்டங்களில் பணிகள் நடைபெறுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com