போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 22 ஆண்டுகள் சிறை

காரைக்கால் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், கூலித் தொழிலாளிக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

காரைக்கால் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், கூலித் தொழிலாளிக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு கிராமத்தைச் சோ்ந்த ஜெயராமன் (48). கூலித் தொழிலாளியான இவா், கடந்த 2020- ஆம் ஆண்டு அதே பகுதியில், வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி, பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளாா். மேலும் இது குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என சிறுமியை மிரட்டியுள்ளாா்.

சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பெற்றோருக்கு சம்பவம் குறித்து தெரியவந்தது.

இதையடுத்து சிறுமியின் பெற்றோா், நெடுங்காடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ், ஜெயராமனை கைது செய்தனா்.

இந்த வழக்கு காரைக்கால் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை விசாரணையின் முடிவில், ஜெயராமனுக்கு பாலியல் துன்புறுத்தல் குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், சிறுமியை மிரட்டிய குற்றத்துக்காக மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி அல்லி தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com