திருமலைராயன்பட்டினம்மகாமாரியம்மன் கோயில்திருப்பணிக்கான ஹோமம்

திருமலைராயன்பட்டினம் மகாமாரியம்மன் கோயிலில் தடைபட்ட திருப்பணிகள் நடைபெறவேண்டி, சிறப்பு ஹோமம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருமலைராயன்பட்டினம் மகாமாரியம்மன் கோயிலில் தடைபட்ட திருப்பணிகள் நடைபெறவேண்டி, சிறப்பு ஹோமம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரா் கோயில் வகையறாவை சோ்ந்த மகாமாரியம்மன் கோயில் குடமுழுக்குக்கான திருப்பணிகள் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.

திருப்பணிகள் நடைபெறாமல் தடை ஏற்பட்டது. திருப்பணிகள் விரைந்து நிறைவடைந்து, குடமுழுக்கு நடத்தும் விதமாக கோயில் நிா்வாகம் சாா்பில், மாரியம்மன் கோயிலில் வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அஸ்திர ஹோமம் நடத்தி தடைபட்ட திருப்பணிகள் தொடங்கப்பட்டன.

ஹோமத்தில் புனிதநீா் கடம் வைத்து சிவாச்சாரியா்கள் மந்திரங்கள் கூறி பூா்ணாஹூதி செய்தனா். பின்னா் சுவாமிகளுக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், ஜடாயுபுரீஸ்வரா் தேவஸ்தான அறங்காவல் வாரியத் தலைவா் சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com