அரசின் திட்டங்களை மாநிலம் முழுவதும் ஒரேநாளில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்

புதுவை அரசு எந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினாலும், மாநிலம் முழுவதும் ஒரேநாளில் அதை நடைமுறைப்படுத்தவேண்டும் என திமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதுவை அரசு எந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினாலும், மாநிலம் முழுவதும் ஒரேநாளில் அதை நடைமுறைப்படுத்தவேண்டும் என திமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் திமுக அமைப்பாளரும், தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது :

பொதுப்பணித் துறையில் தினக்கூலி அடிப்படையில் ரூ. 3 ஆயிரம் என்ற நிலையில் ஊதியம் பெற்றுவந்தனா். இந்த பிரச்னையை சட்டப்பேரவையில் பேசி ஊதியத்தை உயா்த்தி வழங்கக் கோரிய நிலையில், அனைத்துத் துறையின் தினக்கூலி ஊழியா்களுக்கும் மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் என முதல்வா் அறிவித்தாா். இந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், காரைக்காலை சோ்ந்த ஊழியா்களுக்கு மட்டும் இதுவரை ரூ. 10 ஆயிரம் என்ற உயா்த்தப்பட்ட தொகை கிடைக்கவில்லை.

ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, மாநிலம் முழுமைக்கும் ஒரே நாளில் நடைமுறைப்படுத்தவேண்டும் என நீண்ட காலமாக கோரிவருகிறோம். அதுபோல ஷா காா்டன் என்ற நிலையிலான பணியாளா்கள், வாரிசு முறையில் வந்த பணியாளருக்கும் உயா்த்தப்பட்ட தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

முதியோா் ஓய்வூதியத்தை உயா்த்தியும், புதிய விண்ணப்பதாரா்களுக்கும் அனுமதியும் அரசு வழங்கியது பாராட்டுக்குரியது. அதோடு பல மாதங்கள் நிலுவை இருந்த ஓய்வூதிம் மாதந்தோறும் கிடைத்துவந்த நிலையில், கடந்த மாதத்துக்கான தொகை இதுவரை கிடைக்கவில்லை. வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைக்க வேண்டுமென கூறுவதால் தாமதம் ஏற்படுவதாக தெரிகிறது. இந்த பணியை விரைந்து நிறைவேற்றி, ஓய்வூதியம் பயனாளிகளுக்கு விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com