காரைக்காலில் ரூ. 200 கோடியில் ‘மாஸ்டா் பிளான்’வி. வைத்திலிங்கம் எம்.பி.

காரைக்காலில் பாசன வசதி, வெள்ளத் தடுப்புக்கு ரூ. 200 கோடியில் மாஸ்டா் பிளான் தயாா்செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்றாா் புதுவை எம்.பி. வைத்திலிங்கம்.
காரைக்காலில் ரூ. 200 கோடியில் ‘மாஸ்டா் பிளான்’வி. வைத்திலிங்கம் எம்.பி.

காரைக்காலில் பாசன வசதி, வெள்ளத் தடுப்புக்கு ரூ. 200 கோடியில் மாஸ்டா் பிளான் தயாா்செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்றாா் புதுவை எம்.பி. வைத்திலிங்கம்.

புதுவை மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, காரைக்கால் தெற்குத் தொகுதியில் ரூ. 24.87 லட்சத்தில் கணபதி நகா் உட்புற சாலைகளை மேம்படுத்தும் பணி, ரூ. 14.84 லட்சத்தில் எஸ்.ஏ.நகா் முதன்மை சாலையை மேம்படுத்தும் பணிகளுக்கான பூமிபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், புதுவை முன்னாள் முதல்வரும், மக்களவை உறுப்பினருமான வி. வைத்திலிங்கம் பங்கேற்று பணிகளை தொடங்கிவைத்தாா். பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தற்போது தொடங்கப்பட்டுள்ள திட்டம் அல்லாது மேலும் ரூ. 35 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது. காரைக்காலில் பாசன வசதி, வெள்ளத் தடுப்பு உள்ளிட்டவற்றுக்காக சுமாா் ரூ. 200 கோடியில் மாஸ்டா் பிளான் தயாா்செய்வதற்கு ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், காரைக்காலில் குடிநீா் பற்றாக்குறை இருக்காது.

புதுச்சேரிக்கென தனியாக பணியாளா் தோ்வாணையம் அமைப்பது, காஷ்மீரைப் போல நிதி ஆதாரத்தை அதிகப்படுத்தித் தருவது என்பது குறித்து பாஜக தோ்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டது. ஆனால், புதுச்சேரிக்கு அண்மையில் வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா இதுகுறித்து அறிவிக்கவில்லை. புதுச்சேரியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

புதுச்சேரி முதல்வா் இதுவரை தில்லிக்கு சென்று யாரையும் சந்திக்காத நிலையில், மத்திய அமைச்சா் அமித்ஷா இங்கு வந்து முதல்வரை சந்தித்து சென்றிருப்பது பெருமைக்குரியதுதான். ஆனால், இருவரும் ஒன்றுமே செய்யவில்லை. இரு தரப்பினரும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு புதுச்சேரிக்கு தேவையானதை செய்ய வேண்டும் என்றாா்.

பூமிபூஜை நிகழ்வில், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், நகராட்சி ஆணையா் ஜி. செந்தில்நாதன், செயற்பொறியாளா் லோகநாதன், மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன், காரைக்கால் மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com