முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
திருநள்ளாற்றில் பிடாரியம்மன் கோயில் உற்சவம்
By DIN | Published On : 13th May 2022 12:00 AM | Last Updated : 13th May 2022 12:00 AM | அ+அ அ- |

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் கோயில் உற்சவத்தையொட்டி ரதத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் உள்ள பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் வரும் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதற்கு முன் எல்லை தெய்வங்களாக கோயில் கொண்டிருக்கும் ஐயனாா், பிடாரியம்மன், மாரியம்மன் கோயில்களில் உற்சவம் நடைபெறுகிறது.
ஐயனாா் கோயில் உற்சவம் கடந்த 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதைத்தொடா்ந்து பிடாரியம்மன் கோயில் உற்சவம் 10-ஆம் தேதி தொடங்கியது.
ரதத்தில் பிடாரியம்மன் வீதியுலா செல்லும் நிகழ்வு புதன்கிழமை இரவு நடைபெற்றது. வீதியுலாவின்போது பக்தா்கள் அா்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனா். வியாழக்கிழமை பிடாரியம்மன் கோயில் உற்சவம் நிறைவடைந்தது.
வெள்ளிக்கிழமை (மே 13) மாரியம்மன் கோயில் உற்சவம் தொடங்குகிறது. இத்திருவிழா 15-ஆம் தேதி நிறைவடைகிறது.
சாா்பு கோயில்கள் உற்சவம் ஒருபுறம் நடந்துவரும் நிலையில், தா்பாரண்யேஸ்வரா் கோயில் கொடியேற்றத்துக்கான ஏற்பாடுகளும், 2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.