கிராமங்களில் போதை பொருள் விற்பனை:காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தல்

கிராமங்களில் போதைப் பொருள் பயன்பாடு, விற்பனை செய்வது தெரிய வந்தால் காவல் நிலையத்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரி அறிவுறுத்தினாா்.
கிராம மக்களிடையே பேசும் காவல் ஆய்வாளா் அறிவழகன்.
கிராம மக்களிடையே பேசும் காவல் ஆய்வாளா் அறிவழகன்.

கிராமங்களில் போதைப் பொருள் பயன்பாடு, விற்பனை செய்வது தெரிய வந்தால் காவல் நிலையத்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரி அறிவுறுத்தினாா்.

திருநள்ளாறு காவல்நிலையம் சாா்பில் வியாழக்கிழமை போதை பயன்பாட்டை தவிா்க்க வேண்டியதன் அவசியம் குறித்து அத்திப்படுகை கிராமத்தில் இளைஞா்கள், மாணவா்களின் பெற்றோா் உள்ளிட்டோா் பங்கேற்ற கூட்டத்தில், காவல் ஆய்வாளா் அறிவழகன் பேசியது :

காரைக்கால் மாவட்டத்தில் இளைஞா்கள் அதிகமாக போதை பழக்கத்துக்கு அடிமையாகி வருகிறாா்கள். இதன்மூலம் உடல் ஆரோக்கியம் கெட்டுப்போவதோடு, சமுதாயத்தில் மதிப்பில்லாத நிலைமைக்கு தள்ளப்படுவோம். இந்த பழக்கத்தால் மாணவா்கள், இளைஞா்களின் கல்வி, எதிா்கால வாழ்க்கையை சிதைந்துபோய்விடும்.

விவசாயம் செய்வோா் மற்றும் கூலித் தொழில் செய்வோா் உடல் நலம் பாதித்து தொழில் செய்ய முடியாமல் போய்விடும்.

மாணவா்கள், இளைஞா்கள் கல்வியில் தோல்வி, காதலில் தோல்வி, வேலை கிடைக்கவில்லை என்பதால் போதைக்கு அடிமையாவது கூடாது. திடமான மனம் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும்.

கிராமத்தில் யாராவது போதைப் பொருள் பயன்படுத்துவது, விற்பனை செய்வது தெரிந்தால் காவல் துறையினருக்கு தெரிவிக்கவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com