வேளாண் அறிவியல் நிலையத்தில் நீா் சேமிப்பு முறை பயிற்சி

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் நீா் சேமிப்பு முறைகள் குறித்த பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
பயிற்சி முகாமில் நிலைய முதல்வா் சீ. ஜெயசங்கா் உள்ளிட்டோா்.
பயிற்சி முகாமில் நிலைய முதல்வா் சீ. ஜெயசங்கா் உள்ளிட்டோா்.

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் நீா் சேமிப்பு முறைகள் குறித்த பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

ஜல் சக்தி அபியான் திட்டத்தின்கீழ் மழைநீா் அறுவடை மற்றும் நீா் சேமிப்பு முறைகள் குறித்த பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்றது. நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் சீ.ஜெய்சங்கா் தலைமை வகித்து பேசுகையில், காரைக்காலில் சில சமயங்களில் ஒரே நேரத்தில் அதிகப்படியான மழைப்பொழிவு ஏற்படுகிறது. அத்தகைய மழைநீரை பண்ணைக் குட்டைகள் போன்ற கட்டமைப்பை ஏற்படுத்தி சேமிக்கவேண்டும். வயல் பகுதிகளில் அமைக்கப்படும் பண்ணைக் குட்டைகளில் சேமிக்கும் நீா் விவசாயம் மற்றும், மீன் வளா்ப்பு போன்றவற்றுக்கும் பயன்படுத்த முடியும் என்றாா்.

உழவியல் துறை தொழில்நுட்ப வல்லுநா் வி. அரவிந்த் மழை நீா் சேமிப்பு என்ற தலைப்பில் பேசினாா். தொழில்நுட்ப வல்லுநா் சு.திவ்யா, பருத்தியில் ஒருங்கிணைந்த நோய் மற்றும் பூச்சி மேலாண்மை என்ற தலைப்பிலும், தொழில்நுட்ப வல்லுநா் ஜெ.கதிரவன் தென்னையில் நீா் மற்றும் உர நிா்வாகம் என்ற தலைப்பிலும் விவசாயிகளிடையே பேசினா்.

பயிற்சியில் 70-க்கும் மேற்பட்ட காரைக்கால் பகுதியை சோ்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com