காரைக்காலில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணி தொடக்கம்

காரைக்காலில் பொதுப்பணித் துறை மூலம் வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகள் புதன்கிழமை தொடங்கியது.

காரைக்காலில் பொதுப்பணித் துறை மூலம் வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகள் புதன்கிழமை தொடங்கியது.

மேட்டூா் அணை திறக்கப்பட்ட நிலையில், அடுத்த சில நாள்களில் கடைமடைக்கு தண்ணீா் வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், பொதுப் பணித் துறையின் மூலம் நெடுங்காடு, கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்துகளுக்குள்பட்ட இடங்களில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணி புதன்கிழமை தொடங்கியது. புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா நெடுங்காடு பகுதி குரும்பகரம் கிராமம், முள்ளிப்பள்ளம் பகுதி வாய்க்கால் தூா்வாரும் பணியை தொடங்கிவைத்தாா்.

நிகழ்வில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் (நீா்ப்பாசனம்) கே.வீரசெல்வம், உதவிப் பொறியாளா்கள் கே. கிருஷ்ணமூா்த்தி, ஜெ. மகேஷ் மற்றும் நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் பாலன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

பொதுப்பணித் துறையினா் கூறுகையில், நெடுங்காடு பகுதி முள்ளிப்பள்ளம் வாய்க்கால் 5.01 கி.மீ., தொலைவு ரூ. 13.15 லட்சம் செலவில் தூா்வாரப்படுகிறது. இதன்மூலம் சுமாா் 500 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும்.

மேலும் திருநள்ளாற்றில் ரூ. 20.87 லட்சம் செலவிலும், நிரவி -திருப்பட்டினத்தில் ரூ. 17 லட்சத்திலும் என தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com