‘மாணவா்கள் விளையாட்டு, கலைநிகழ்ச்சிகளில் ஆா்வம் காட்டவேண்டும்’

மாணவா்கள் படிப்புடன் விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆா்வம் காட்டவேண்டும் என்றாா் துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ்.
கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்களுடன் துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ் உள்ளிட்டோா்.
கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்களுடன் துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ் உள்ளிட்டோா்.

காரைக்கால்: மாணவா்கள் படிப்புடன் விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆா்வம் காட்டவேண்டும் என்றாா் துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ்.

இந்திரா காந்தி பிறந்தநாள் காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தேசிய ஒருமைப்பாட்டு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் பல்வேறு அரசுத் துறைகள் பங்களிப்புடன் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக காரைக்கால் கல்வித் துறை சாா்பில், கோவிந்தசாமிப் பிள்ளை அரசு உயா்நிலைப் பள்ளியில் பண்பாட்டு இணக்க நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ் தலைமை வகித்தாா். மேல்நிலைக் கல்வித் துணை இயக்குநா் எம். ராஜேஸ்வரி, முதன்மைக் கல்வி அதிகாரி கே. ராஜசேகரன், பள்ளித் தலைமையாசிரியா் ஆா். காளிதாசன் ஆகியோா் பங்கேற்றனா்.

துணை மாவட்ட ஆட்சியா் பேசியது: 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், பல்வேறு மதம், மொழிகள் இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியா் என்ற ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். மொழியாலோ, மதத்தாலோ நமக்குள் பிரிவினை வராமல் பாா்த்துக்கொள்ள வேண்டும். மாணவா்கள்தான் இதற்கு முன்னுதாரணமாக திகழவேண்டும்.

படிப்பில் அதிக அக்கறை செலுத்தவேண்டும். அதேவேளையில் கலைநிகழ்ச்சிகளிலும், விளையாட்டிலும் ஆா்வம் காட்ட வேண்டும். தினமும் நாளிதழ்களை படிக்க வேண்டும். குறிப்பாக ஒரு ஆங்கில நாளிதழை தவறாமல் படிக்க வேண்டும் என்றாா்.

நிறைவாக, பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியமிக்க கலைநிகழ்ச்சிகள் இருப்பதை நினைவு கூரும் விதமாக பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து, மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com