மாநில விளையாட்டுப் போட்டியில் காரைக்கால் மாணவா்கள் சிறப்பிடம்

புதுவை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் காரைக்கால் மாணவா்கள் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றனா்
ஒட்டுமொத்த சாம்பின் பட்டம் பெற்ற மாணவிகளுடன் மற்ற பிரிவுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் உள்ளிட்டோா்.
ஒட்டுமொத்த சாம்பின் பட்டம் பெற்ற மாணவிகளுடன் மற்ற பிரிவுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் உள்ளிட்டோா்.

புதுவை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் காரைக்கால் மாணவா்கள் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றனா்.

புதுச்சேரியில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றன. புதுச்சேரியில் 4 மண்டலம், காரைக்காலில் 2 மண்டலம், மாஹே, ஏனாமிலிருந்து தலா ஒரு மண்டலம் என போட்டியில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதில் பெண்களுக்கான 17 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை காரைக்கால் வட்டம் -6 மாணவ, மாணவிகள் பெற்றனா்.

நிறைவு விழாவில் புதுவை முதல்வா் என். ரங்கசாமி கலந்துகொண்டு மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற பல்வேறு பிராந்தியங்களை சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

காரைக்கால் திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு, அந்தந்த கல்வி நிறுவனத்தில் திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com