அலையாத்திக் காடு பகுதியில் நெகிழி, குப்பைகள் அகற்றம்

அலையாத்திக் காடு பகுதியில் கிடந்த நெகிழி மற்றும் குப்பைகளை அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
அலையாத்திக் காடு பகுதியில் கழிவுப் பொருள்களை அகற்றும் பணியில் ஈடுபட்டோா்.
அலையாத்திக் காடு பகுதியில் கழிவுப் பொருள்களை அகற்றும் பணியில் ஈடுபட்டோா்.

அலையாத்திக் காடு பகுதியில் கிடந்த நெகிழி மற்றும் குப்பைகளை அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

உலக சுற்றுச்சூழல் விழிப்புணா்வு தினத்தை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட நிா்வாகம் மற்றும் புதுவை வன பாதுகாப்புத்துறை இணைந்து, காரைக்கால் அலையாத்திக் காடு பகுதியில் தூய்மைப் பணியை மேற்கொண்டன. மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன் தலைமையில் புதுச்சேரி வன பாதுகாப்பு அதிகாரி விஜி முன்னிலையில் இப்பணி நடைபெற்றது.

குடிமையியல் தன்னாா்வலா்கள், ஆப்தமித்ரா தன்னாா்வலா்கள் மற்றும் பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். படகில் சென்று நெகிழி உள்ளிட்ட குப்பைகளை அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com