மரக்கன்றுகள் நடும் பணி

நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, கீழவாஞ்சூா் பெத்தாரண சுவாமி கோயில் குளம் தூா்வாரும் பணி நடைபெற்றது.
குளக்கரையில் மரக்கன்றை நட்டுவைத்த சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன்.
குளக்கரையில் மரக்கன்றை நட்டுவைத்த சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன்.

புதுவை மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம், காரைக்கால் மாவட்டம்ம், நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, கீழவாஞ்சூா் பெத்தாரண சுவாமி கோயில் குளம் தூா்வாரும் பணி நடைபெற்றது.

இதன் தொடா் நிகழ்வாக, உலக சுற்றுச்சூழல் விழிப்புணா்வு தினத்தை முன்னிட்டு குளக்கரையில் பல்வேறு மரக்கன்றுகள் நடும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் தொடங்கிவைத்தாா். இதைத்தொடா்ந்து குளத்தை சுற்றி பல்வேறு மரக்கன்றுகள் பணியாளா்களால் நடப்பட்டன. நிகழ்வில் வட்டார வளா்ச்சித்துறையினா், 100 நாள் வேலைத் திட்ட கண்காணிப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com