தலித், பழங்குடியின அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

புதிய நாடாளுமன்றக் கட்டட விவகாரம் தொடா்பாக தலித், பழங்குடியின கூட்டமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதிய நாடாளுமன்றக் கட்டட விவகாரம் தொடா்பாக தலித், பழங்குடியின கூட்டமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காரைக்கால் மதகடி பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு காரைக்கால் தலித், பழங்குடியின அமைப்புகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் வே.கு. நிலவழகன் தலைமை வகித்தாா்.

புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவா் புறக்கணிக்கப்பட்டுள்ளாா் எனவும், சாவா்க்கா் பிறந்த நாளில் நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்படுவதாகவும், அரசியலமைப்பு மரபுகளை புறந்தள்ளி மத்திய அரசு செயல்படுவதாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தலித் மக்கள் கூட்டமைப்புத் தலைவா் பி. தங்கராசு, புதுவை பழங்குடியின மக்கள் கூட்டமைப்புத் தலைவா் ஏ. மனோகரன், காரைக்கால் தலித் சேனாவை சோ்ந்த மா. சுப்பிரமணியன், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்கள் கூட்டமைப்பை சோ்ந்த ஜெ. சூா்யா உள்ளிட்ட பலா் கண்டன உரையாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com