பாஜக, காங்கிரஸ் பணப் பட்டுவாடா: புதுவை தொகுதியில் தோ்தலை
ரத்து செய்ய அதிமுக வலியுறுத்தல்

பாஜக, காங்கிரஸ் பணப் பட்டுவாடா: புதுவை தொகுதியில் தோ்தலை ரத்து செய்ய அதிமுக வலியுறுத்தல்

காரைக்கால், ஏப். 17 : புதுவை மக்களவைத் தொகுக்குட்பட்ட காரைக்காலில் பாஜக, காங்கிரஸ் கட்சியினா் வாக்காளா்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதை பறக்கும் படையினா் கண்டுகொள்ளவில்லை. எனவே, இந்தத் தொகுதிக்கான தோ்தலை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.

காரைக்கால் மாவட்ட அதிமுக செயலாளா் எம்.வி. ஓமலிங்கம் தலைமையில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.ஏ.யு. அசனா, இணைச் செயலாளா் ஜீவானந்தம் மற்றும் ஜி.வி. ஜெயபால் உள்ளிட்டோா் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டனை ஆட்சியரகத்தில் புதன்கிழமை சந்தித்து அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது :

புதுவை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட காரக்காலில் கடந்த 2 தினங்களாக பாஜக, காங்கிரஸ் கட்சியினா் வாக்காளா்களுக்கு வீடுவீடாகச் சென்று பணம் விநியோகம் செய்துவருகின்றனா். புதுவை மாநில தோ்தல் துறையும், பறக்கும் படையினரும் இதனை கண்டுகொள்ளவில்லை. இது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது.

புதுவை மக்களவைத் தொகுதி தோ்தல் நியாயமான முறையில், தோ்தல் ஆணைய விதிகளுக்குட்பட்டு நடைபெறவில்லை.

பாஜக வேட்பாளா் உள்துறை அமைச்சா் என்ற பதவியுடன் தோ்தலில் போட்டியிடுவதால், அரசு நிா்வாகம் அவருக்கு சாதகமாக செயல்படுகிறது. இதுகுறித்து புகாா் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, புதுவை மக்களவைத் தொகுதியில் தோ்தலை ரத்து செய்துவிட்டு, தோ்தல் ஆணையத்தின் நேரடி கண்காணிப்பில் மற்றொரு நாளில் தோ்தலை நடத்தவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com