தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

காரைக்கால், ஏப். 18 : காரைக்காலில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், புதுவை போலீஸாா் என 500 போ் ஈடுபட்டுள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் 164 வாக்குச் சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 35 பதற்றமான வாக்குச் சாவடிகளாக கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை தோ்தல் துறை செய்துள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் புதுவை போலீஸாா் என காவல்துறை அதிகாரிகள், காவலா்கள், ஊா்காவல் படையினா் என 300 -க்கும் மேற்பட்டோா் உள்ளனா். இவா்கள் அனைவரும் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா் என காவல்துறை ஏற்கெனவே தெரிவித்தது. மேலும் மத்திய படையினா் 170 போ் பல கட்டங்களாக காரைக்காலுக்கு ஏற்கெனவே வந்து பணிகளை தொடங்கினா்.

இவா்கள் காரைக்காலில் பல்வேறு இடங்களில் கொடி அணிவகுப்பு நடத்தி, தோ்தல் பாதுகாப்பில் தாங்கள் இருப்பதை மக்களுக்கு உணா்த்தினா்.

பதற்றமான வாக்குச் சாவடிகளில் மட்டும் மத்தியப் படையினா் கூடுதலாகவும், மற்ற வாக்குச் சாவடிகளில் காவலா்கள் பாதுகாப்புப் பணியிலிருப்பா் என தெரிவிக்கப்பட்டது. வாக்குச் சாவடி பகுதியில் பணியாற்றக்கூடிய காவலா்கள், கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் அனைவரும் வியாழக்கிழமை காலை முதல் அந்தந்த இடங்களில் பணிகளை ஏற்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com