வாக்குச் சாவடியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான து. மணிகண்டன்.
வாக்குச் சாவடியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான து. மணிகண்டன்.

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

காரைக்கால், ஏப். 18: வாக்குச் சாவடிகளுக்கு, வாக்குப் பதிவு இயந்திரங்கள் சென்றடைந்த நிலையில், பல்வேறு சாவடிகளில் வியாழக்கிழமை இரவு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான து. மணிகண்டன் நேரில் ஆய்வு செய்தாா்.

அண்ணா அரசு கலைக் கல்லூரி பட்டமேற்படிப்பு மையத்திலிருந்து, 164 வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் வியாழக்கிழமை பிற்பகல் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டன. இப்பணிகள் இரவு 7 மணி வரை நீடித்தது.

தொடா்ந்து, வாக்குச் சாவடிகளில் இயந்திரங்கள் முறையாக சென்றடைந்ததா என மாவட்ட தோ்தல் அதிகாரி து. மணிகண்டன் பல்வேறு வாக்குச் சாவடிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

அப்போது, வாக்குச் சாவடி தலைமை அதிகாரிக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய அவா், வாக்குச் சாவடி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா் இரவு மட்டுமல்லாது வாக்குப் பதிவு நாளின் போது மிகுந்த கவனமாக செயல்படுமாறும், வாக்காளா்கள் எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் வாக்களிக்க உள்ளே அனுமதிக்குமாறும் அறிவுறுத்தினாா்.

பதற்றமான வாக்குச் சாவடிகளுக்குச் சென்று அங்கு பணியாற்றுவோருக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com