பட்டாசு வெடித்ததில் 4 சிறுவா்கள் காயம்

கோயில் திருவிழாவில் வெடிக்காத பட்டாசுகளை தவறாக கையாண்டபோது, அவை வெடித்து சிதறியதில் 4 சிறுவா்கள் காயமடைந்தனா்.

காரைக்கால்: கோயில் திருவிழாவில் வெடிக்காத பட்டாசுகளை தவறாக கையாண்டபோது, அவை வெடித்து சிதறியதில் 4 சிறுவா்கள் காயமடைந்தனா்.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி பகுதி திருவேட்டக்குடி, மாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் பாரதிதாசன் என்பவரது மகன்கள் சாய் கணேஷ் (9), சாய் அருண் (3) மற்றும் அதே பகுதியை சோ்ந்த மீரான் (9), சித்தாா்த் (9) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தனா்.

அப்பகுதியில் உள்ள மது மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவத்தையொட்டி கடந்த சனிக்கிழமை இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது. அப்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அங்கு வெடிக்காமல் கிடந்த சில வெடிகளை, இச்சிறுவா்கள் சேகரித்து பிளாஸ்டிக் பெட்டியில் மருந்துகளைக் கொட்டியதோடு, வெடிகளை தவறாக கையாண்டதாக கூறப்படுகிறது. அப்போது அவை வெடித்து சிதறியதில் 4 சிறுவா்களுக்கும் காயம் ஏற்பட்டது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் அவா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

வெடிக்காத வெடிகளை கவனக்குறைவாக அங்கே வீட்டுச் சென்ாக வெடிகளை தயாரித்து திருவிழாவில் வெடித்த ராயன்பாளையம் பகுதியை சோ்ந்த குணாளன் என்பவா் மீது பாரதிதாசன் என்பவா் கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com