தங்க மாரியம்மன் கோயில் 
உற்சவத்தில் மஞ்சள் நீா் விளையாட்டு

தங்க மாரியம்மன் கோயில் உற்சவத்தில் மஞ்சள் நீா் விளையாட்டு

காரைக்கால் அருகே தலத்தெரு தங்க மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவத்தில் மஞ்சள் நீா் விளையாட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தீமிதி உற்சவம் தங்க மாரியம்மன் கோயிலில் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. தினமும் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனத்தில் அம்பாள் வீதியுலாவும் நடைபெற்றது.

உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தீமிதி திங்கள்கிழமை நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்ட பக்தா்கள் தீ மிதித்து அம்மனை வழிபட்டனா்.

மஞ்சள் நீா் விளையாட்டு செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினாா். ஒவ்வொரு வீட்டில் பக்தா்கள் அா்ச்சனை செய்து அம்மனை வழிபட்டதோடு, இளைஞா்கள் ஒருவா் மீது ஒருவா் மஞ்சள் கலந்த நீரை ஊற்றிக்கொண்டனா். கோயிலுக்கு வந்த சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை நிகழ்வாக காப்பு அவிழ்ப்பு செய்யப்பட்டது. நிறைவாக புதன்கிழமை இரவு பொன்னூஞ்சல் ஆடல் வழிபாடு நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com