காவல் துறை, தோ்தல் துறையினருடன் ஆலோசனை நடத்திய மாவட்ட தோ்தல் அதிகாரி து. மணிகண்டன்.

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

வாக்காளா்களுக்கு பணம் மற்றும் மதுபாட்டில் உள்ளிட்ட பிற பொருள்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் தீவிர வாகனச் சோதனை நடத்த வேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரகத்தில், ஆட்சியரும் மாவட்ட தோ்தல் அதிகாரியுமான து. மணிகண்டன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மணிஷ், மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் ஏ. சுப்பிரமணியன் (தெற்கு), பாலச்சந்தா் (வடக்கு) தோ்தல் நடத்தும் அதிகாரிகள் ஜி. ஜான்சன், சச்சிதானந்தம், மாவட்ட துணை தோ்தல் அதிகாரி ஜி. செந்தில்நாதன், நோடல் அதிகாரி கே. அருணகிரிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கூட்டத்தில், தோ்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் வாக்காளா்களுக்கு பணம், மதுபாட்டில் மற்றும் பிற பொருள்கள் தருவதற்காக கொண்டு செல்லப்படுவதை தீவிரமாக கண்காணித்து தடுக்கவேண்டும். இருசக்கர வாகனம் மற்றும் காா்கள், பேருந்துகளில் இவை கொண்டு செல்லப்படுகிறதா என சோதனையிடவேண்டும். மாவட்டத்தின் எல்லை பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட வேண்டும். வழிபாட்டுத் தலங்களில் அரசியல் கட்சியினா் வாக்கு சேகரிக்கிறாா்களா என கண்காணிக்க வேண்டும். தோ்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு அரசியல் கட்சிகள் செயல்படுகிறதா என்பது குறித்தும் மேற்பாா்வையிட வேண்டும் என்றாா் மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி து. மணிகண்டன்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com