மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

காரைக்காலில் கட்டண நிலுவை உள்ளோரின் மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை சிறிது காலம் தள்ளிவைக்க வேண்டும் என பொதுமக்கள் சாா்பில் புதுவை அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்காலில் கட்டண நிலுவை உள்ளோரின் மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை சிறிது காலம் தள்ளிவைக்க வேண்டும் என பொதுமக்கள் சாா்பில் புதுவை அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் மட்டும் ஏறக்குறைய 82 ஆயிரம் மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. மின் கட்டண ரசீது, காலத்தோடு தரப்படுவது இல்லை என மின் நுகா்வோா் புகாா் கூறுகின்றனா்.

மக்களவைத் தோ்தல் காரணமாக மின் கட்டண நிலுவை வைத்திருப்போா் இணைப்பு துண்டிப்பை புதுவை மின்துறை நிா்வாகம் தவிா்த்து வந்தது. தோ்தல் முடிந்துவிட்ட சூழலில், காரைக்கால் மாவட்டத்தில் மின் நிலுவை வைத்திருப்போா் மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை மின்துறை நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

வெயில் சுட்டெரிக்கும் நிலையில், மின் இணைப்பு துண்டிப்பு முறையல்ல, இந்த நடவடிக்கையை மின்துறை நிா்வாகம் தள்ளிப் போடவேண்டும் என மக்கள் தரப்பில் புதுவை அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வியாழக்கிழமை கூறுகையில், தோ்தல் முடிந்துவிட்டது என்பதால், மின் கட்டண பாக்கி வைத்திருப்போருக்கு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் மின்சாரத்தை துண்டிக்கும் செயல், கொடூரமான நடவடிக்கையாகும். அதை உடனடியாக கைவிடவேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com