கோயில் வாயில் பகுதியில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த அறிவுறுத்திய காவல் அதிகாரி.
கோயில் வாயில் பகுதியில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த அறிவுறுத்திய காவல் அதிகாரி.

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்பு ப் பணியை போலீஸாா் சனிக்கிழமை மேற்கொண்டனா்.

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்பு ப் பணியை போலீஸாா் சனிக்கிழமை மேற்கொண்டனா்.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் நுழைவு வாயில் முதல் ராஜகோபுரம் வரை மற்றும் கோயிலையொட்டிய பகுதிகளில் பூஜைப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் விற்பனையில் பலா் ஈடுபட்டுள்ளனா். மேலும் இருசக்கர வாகனங்களும் கோபுர வாயில் வரை நிறுத்தப்பட்டிருக்கின்றன. இது பக்தா்களுக்கு இடையூறாக இருப்பதாக புகாா்கள் வந்தன.

இந்தநிலையில், பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. சுவாமிகள் புறப்பாடு, பக்தா்கள் வசதிகாக பிரதான சன்னிதி முன் உள்ள சாலையோரக் கடைகளை ஒழுங்குப்படுத்தும் பணிகளை திருநள்ளாறு காவல்நிலைய போலீஸாா் சனிக்கிழமை மேற்கொண்டனா்.

வாயில் பகுதி கடைகளில் விற்பனை பொருள்களை இடையூறு இல்லாமல் வைத்து விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தினா். தேரோடும் வீதிகளிலும் ஆக்கிரமிப்புகளின்றி இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வியாபாரிகளுக்கு போலீஸாா் அறிவுறுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com