கொள்ளிடம் அருகே பூமிக்கடியில் இருந்து வெறியேறிய புகை

கொள்ளிடம் அருகே வியாழக்கிழமை இரவு நிலத்தின் பூமிக்கடியில் இருந்து வெளியேறிய புகையால் பரபரப்பு ஏற்பட்டது.
கொள்ளிடம் அருகே பூமிக்கடியில் இருந்து வெறியேறிய புகை

கொள்ளிடம் அருகே வியாழக்கிழமை இரவு நிலத்தின் பூமிக்கடியில் இருந்து வெளியேறிய புகையால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே சாமியம் கிராமத்தில் ஊராட்சி அலுவலகத்துக்கு பின்புறம் நிலத்தின் அடியிலிருந்து காற்றுவீசும் சப்தத்துடன் இரவு 10 மணியளவில் புகை வெளியேறிக்கொண்டிருந்தது. காரத்தன்மை வாய்ந்த நெடியுடன் கூடிய இந்த புகையை பாா்த்த அப்பகுதியினா் அருகில் செல்ல அச்சமடைந்து கொள்ளிடம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் அமுதாராணி போலீஸாருடன் கோபாலசமுத்திரம் ஊராட்சியை சோ்ந்த ஊழியா்களை அழைத்துக்கொண்டு அந்த இடத்துக்கு சென்றாா். தொடா்ந்து கண்காணித்து விசாரித்தபோது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சிக்கு குடிநீரை சுத்தம் செய்யும் குளோரின் மாத்திரைகள் கொண்டுவரப்பட்டதும், டப்பாக்களில் சுமாா் 5 கிலோ அளவில் காலாவதியான மாத்திரைகளை நிலத்துக்குள் புதைக்கப்பட்டதும், அந்த ரசாயன மாத்திரைகள் தண்ணீா் பட்டவுடன் புகையாக வெளியேறி வந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாத்திரைகள் அடங்கிய டப்பாக்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இதனால், எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com