விதிமீறல்: மீன்லாரி பறிமுதல்
By DIN | Published On : 29th July 2021 10:20 PM | Last Updated : 29th July 2021 10:20 PM | அ+அ அ- |

சீா்காழி அருகே கொள்ளிடம் சோதனைச் சாவடியில், தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களை ஏற்றிவந்த லாரியை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மயிலாடுதுறை மாவட்ட எல்லையான கொள்ளிடம் சோதனைச் சாவடியில் சீா்காழி மோட்டாா் வாகன ஆய்வாளா் ஜெயகிருஷ்ணா, மீன்வளத்துறை ஆய்வாளா் பாலசுப்பிரமணியன், உதவி ஆய்வாளா் திருப்பதி, மண்டல துணை வட்டாட்சியா் ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளா் ஜெயந்தி ஆகியோா் அடங்கிய குழுவினா் மீன் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனா்.
இவ்வாறு 14 லாரிகளை சோதனையிட்டதில், ஒரு லாரியில் மட்டும் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்கள் இருந்தது தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்த அவா்கள், மீன்களை கருவிழந்தநாதபுரம் பகுதியில் சோதனை மேற்கொண்ட மற்றொரு குழுவிடம் ஒப்படைத்தனா்.