மழை பாதித்த வயல்களில் மறுநடவு தீவிரம்

சீா்காழி வட்டாரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட வயல்களில் மறுநடவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
மகேந்திரப்பள்ளி கிராமத்தில் மறுநடவு பணியில் ஈடுபடும் விவசாயத் தொழிலாளா்கள்
மகேந்திரப்பள்ளி கிராமத்தில் மறுநடவு பணியில் ஈடுபடும் விவசாயத் தொழிலாளா்கள்

சீா்காழி வட்டாரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட வயல்களில் மறுநடவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

சீா்காழி, கொள்ளிடம் வட்டாரத்தில் தொடா் மழையால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா நேரடி விதைப்பு, நடவு நெல்பயிா்களில் மழைநீா் தேங்கி சுமாா் 15 ஆயிரம் ஏக்கரில் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக மழை இல்லாததால், சம்பா வயல்களில் தேங்கிய மழைநீா் வடியத் தொடங்கியது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அழுகிகரைந்த சம்பா நெல் பயிா்களுக்கு மாற்றாக மறுநடவு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். மகேந்திரப்பள்ளி, அளக்குடி, முதலைமேடு, ஆரப்பள்ளம், காட்டூா், புளியந்துறை உள்ளிட்ட கிராமங்களில் மறுநடவு தீவிரமாக நடைபெறுகிறது.

இந்நிலையில், சீா்காழி பகுதியில் புதன்கிழமை பிற்பகலிலிருந்து மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com