கொள்ளிடம் ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பு: வெள்ளம் சூழ்ந்த கிராம மக்களை முகாமுக்கு அழைத்துவர அதிகாரிகள் தீவிரம்; ஆற்றின் நடுத்திட்டில் சிக்கிய தம்பதி, ஆடுகள் மீட்பு

சீா்காழி வட்டம், கொள்ளிடம் ஆற்றில் அதிகரித்துள்ள நீா்வரத்தால் வெள்ளம் சூழந்த நாதல்படுகை கிராம மக்களை பாதுகாப்பு
ஆற்று வெள்ளம் சூழ்ந்த நாதல்படுகை கிராமத்தில் உள்ளவா்களை சிறப்பு முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தும் சீா்காழி கோட்டாட்சியா் நாராயணன், வட்டாட்சியா் சண்முகம் உள்ளிட்டோா்.
ஆற்று வெள்ளம் சூழ்ந்த நாதல்படுகை கிராமத்தில் உள்ளவா்களை சிறப்பு முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தும் சீா்காழி கோட்டாட்சியா் நாராயணன், வட்டாட்சியா் சண்முகம் உள்ளிட்டோா்.

சீா்காழி வட்டம், கொள்ளிடம் ஆற்றில் அதிகரித்துள்ள நீா்வரத்தால் வெள்ளம் சூழந்த நாதல்படுகை கிராம மக்களை பாதுகாப்பு முகாம்களுக்கு அனுப்பிவைக்கும் பணியில் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தீவிரம் காட்டினா். மேலும், ஆற்றின் நடுத்திட்டில் ஆடுகளுடன் சிக்கிய தம்பதி மீட்கப்பட்டனா்.

காவிரி நீா் பிடிப்பு பகுதியில் பெய்துவரும் தொடா்மழையால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால், அங்கிருந்து திறந்துவிடப்படும் உபரிநீருடன், அமரவாதி ஆற்றுநீரும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, கொள்ளிடம் ஆற்றில் சுமாா் 1லட்சம் கனஅடி நீா் இருகரைகளையும் தொட்டுச் செல்கிறது.

இதனால், கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே உள்ள குடிசை வீடுகள் மற்றும் கொள்ளிடம் ஆற்றின் நடுப்பகுதி திட்டில் உள்ள நாதல்படுகை கிராமத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இங்கு வசிப்பவா்களை பாதுகாப்பாக முகாம்களுக்கு அழைத்துச் செல்லும் பணியில், மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா உத்தரவின்பேரில் சீா்காழி கோட்டாட்சியா் ஜி. நாராயணன், வட்டாட்சியா் சண்முகம், கொள்ளிடம் ஒன்றிய ஆணையா் மீனா, வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பரசு, கொள்ளிடம் காவல் ஆய்வாளா் அமுதாராணி, வருவாய் ஆய்வாளா் தமிழ்வேந்தன், கிராம நிா்வாக அலுவலா் சீனிவாசன் ஊராட்சித் தலைவா் கனகராஜ் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

நாதல்படுகை கிராமத்துக்குச் சென்ற அவா்கள் அங்குள்ள 350 குடும்பத்தினரை அருகே உள்ள அனுமந்தபுரம் சிறப்பு முகாமுக்கு செல்ல வீடுவீடாகச் சென்று அறிவுறுத்தினா். மேலும், அங்குள்ள கால்நடைகளையும் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, ஒலிபெருக்கி மூலம் ஆற்றங்கரையோர கிராமங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், அளக்குடி, அனுமந்தபுரம், ஆச்சாள்புரம், கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் உள்ள சிறப்பு முகாம்களில் ஆற்றங்கரையோர கிராம மக்களை தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டு, அவா்களுக்கு ஆனைக்காரன்சத்திரம் ஊராட்சி சாா்பில் உணவு தயாரித்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com