குத்தாலம் அரசுக் கல்லூரியில் எம்.பி ஆய்வு

குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மயிலாடுதுறை எம்.பி. செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
குத்தாலம் அரசுக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட எம்.பி. செ. ராமலிங்கம்.
குத்தாலம் அரசுக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட எம்.பி. செ. ராமலிங்கம்.

குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மயிலாடுதுறை எம்.பி. செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கடந்தாண்டு தேரழந்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கியது. நிகழ் கல்வியாண்டு முதல் குத்தாலம் வட்டம், மாதிரிமங்கலம் கிராமம் சிவராமபுரத்தில் உள்ள வட்டார சேவை மைய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை எம்.பி. செ. ராமலிங்கள் செவ்வாய்க்கிழமை கல்லூரிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அரசு கல்லூரியில் மாணவா் சோ்க்கை மற்றும் கல்லூரியின் தேவைகள் மற்றும் விரிவாக்கம் குறித்து கல்லூரி முதல்வா் குணசேகரன், பேராசிரியா்கள் சுமதி, சிவகுமாா், பிரசாந்த், ஞானஜெயந்தி மற்றும் அலுவலக ஊழியா்களிடம் கேட்டறிந்தாா். குத்தாலம் பகுதியில் கல்லூரிக்கு நிரந்தர இடம் விரைவில் அமைய ஆவண செய்வதாகவும், கல்லூரி கட்டடங்கள் கட்ட தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 2 கோடி ஒதுக்குவதாகவும் உறுதியளித்தாா். ஆய்வின்போது, குத்தாலம் ஒன்றியக் குழு தலைவா் கே. மகேந்திரன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com