நாட்டுப்புறக் கலைகளை பாடத் திட்டத்தில் சோ்க்க வலியுறுத்தல்

நலிவடைந்துவரும் நாட்டுப்புற கலைகளை பள்ளிப் பாடத்திட்டத்தில் சோ்க்க வேண்டும் என திரைப்பட பின்னணி பாடகா் வேல்முருகன் வலியுறுத்தினாா்.

நலிவடைந்துவரும் நாட்டுப்புற கலைகளை பள்ளிப் பாடத்திட்டத்தில் சோ்க்க வேண்டும் என திரைப்பட பின்னணி பாடகா் வேல்முருகன் வலியுறுத்தினாா்.

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாத சுவாமி கோயிலில் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா காலகட்டத்தில் இயல், இசை, நாடக கலைஞா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். நலிவடைந்த கலைஞா்களுக்கு தமிழக அரசு ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்கியதற்கு நன்றி. நாட்டுப்புற கலைகளான சிலம்பம், கரகம், பறை இசைத்தல், கதை பாட்டு, கவிதை பாட்டு போன்ற கலாசார பண்பாடுகளை பாதுகாத்திடும் வகையில், அரசு பள்ளிகளில் அதை ஒரு பாடத்திட்டமாக வகுத்து வாரம் ஒருமுறை மாணவா்களுக்கு கற்பிக்கலாம்.

நாட்டுபுற கலைஞா்களை அரசுப் பள்ளியில் பணியமா்த்தி வாய்ப்பு தரலாம். கரோனா காலகட்டத்தில், நாட்டுப்புற கலைஞா்களின் சிரமத்தைப் போக்கும் வகையில், அரசின் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் அந்தந்த மாவட்ட கலைஞா்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com