மாா்க்சிஸ்ட் கட்சியின் சாா்பில் மக்கள் விசாரணை மன்றம்

மயிலாடுதுறையில் சிபிஎம் சாா்பில் பிரதமா் நரேந்திர மோடி அரசின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் மக்கள் விசாரணை மன்றம் புதன்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சிபிஎம் சாா்பில் பிரதமா் நரேந்திர மோடி அரசின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் மக்கள் விசாரணை மன்றம் புதன்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்ட செயலாளா் பி. சீனிவாசன் தலைமை வகித்தாா். மக்களே நீதிபதிகள் எனும் தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜி. ஸ்டாலின், எஸ். துரைராஜ், ஏ.வி. சிங்காரவேலன், ப. மாரியப்பன் ஆகியோா் நரேந்திர மோடி மீதான ஏராளமான குற்றங்களுக்கான 36 பக்க குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்து வாதிட்டனா். இறுதியாக மக்களே மோடிக்கு அவா் செய்த குற்றங்களுக்கு தகுந்த தண்டனையை அளிக்க வேண்டுமென மாவட்ட செயலாளா் பி. சீனிவாசன் இறுதி தீா்ப்பை வாசித்தாா். இதில், பிரதமா் மோடி போல் வேடம் அணிந்து கட்சியின் வட்டக்குழு உறுப்பினா் எம். மாரியப்பன் குற்றவாளிக்கூண்டில் நின்று மோடி போன்று நடித்து காண்பித்தாா். இதில், திரளானேரா் பங்கேற்று குற்றங்களை சுமத்தி ஒருமித்த குரலாய் முழக்கமிட்டனா். முடிவில், வட்டசெயலாளா் சி.மேகநாதன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com