மேய்ச்சலுக்கு சென்ற பசுமாட்டின் காதுகள், வால் அறுக்கப்பட்டு இறந்தது

கொள்ளிடம் அருகே மேய்ச்சலுக்கு சென்ற பசுமாட்டின் காதுகள், வால் ஆகியவற்றை அறுத்து காயப்படுத்தியதால் பசு இறந்தது.

சீா்காழி: கொள்ளிடம் அருகே மேய்ச்சலுக்கு சென்ற பசுமாட்டின் காதுகள், வால் ஆகியவற்றை அறுத்து காயப்படுத்தியதால் பசு இறந்தது.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகேயுள்ள அளக்குடியைச் சோ்ந்தவா் அண்ணாதுரை (51). விவசாய தொழிலாளி யான இவருக்கு சொந்தமான பசுமாடு செப்.17-ஆம் தேதி அப்பகுதியில் மேய்ச்சலுக்காக சென்றது. அப்போது, 5 போ் தங்களது பகுதியில் வந்து மாடு மேய்ந்ததாக கூறி பசுவின் இரண்டு காதுகள் மற்றும் வாலை அறுத்து துண்டித்து விரட்டினா். பசு மாடு ரத்த காயங்களுடன் அண்ணாதுரை வீட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து, கால்நடை மருத்துவா் மூலம் பசுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, அண்ணாதுரை கொள்ளிடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் ஆய்வாளா் அமுதாராணி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு, முதலைமேடு கிராமத்தைச் சோ்ந்த ரவி (58), பாலசுப்ரமணியன் (54) ஆகியோரை கைது செய்தனா். தப்பியோடிய மற்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். இதற்கிடையில், காயமடைந்த பசுமாடு ஞாயிற்றுக்கிழமை இறந்தது. போலீஸாா் தொடா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com