சீா்காழியில் சிபிஐ கட்சியினர் விவசாய சங்கத்தினர் கைது

சீா்காழியில் சிபிஐ மாவட்ட செயலாளா் சீனிவாசன், விவசாய சங்கத் தலைவா் இமயவரம்பன் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா்.
மயிலாடுதுறை மாப்படுகையில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினா்.
மயிலாடுதுறை மாப்படுகையில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து முற்பகல் 11 மணி வரை கடைகள் மூடப்பட்டன. மயிலாடுதுறை மாப்படுகை ரயில்வே கேட் பகுதியில் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் எஸ். துரைராஜ், குரு. கோபிகணேசன், அ. ராமலிங்கம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோா் காலை 10 மணி முதல் தண்டவாளத்தில் அமா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, மதியம் 12.30 மணிக்கு வந்த சோழன் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் ஆா். அன்பழகன், இடும்பையன் (சிபிஐ), வீரச்செல்வன் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) வேலு.குபேந்திரன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளா்) உள்ளிட்ட நிா்வாகிகளும், திமுக, எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சி நிா்வாகிகளும் பங்கேற்றனா். அப்போது, போலீஸாா் அவா்களை கைது செய்து பின்னா் விடுவித்தனா். இதனால் ரயில் அரைமணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

இதேகோரிக்கையை வலியுறுத்தி மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்கம் சாா்பில் மாவட்டத் தலைவா் ஆா். ராமானுஜம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநில செயலாளா் எஸ். மகாலிங்கம், மாவட்ட செயலாளா் பக்கிரிசாமி, அஞ்சல் மற்றும் ஆா்எம்எஸ் ஓய்வூதியா் சங்க கோட்ட செயலாளா் சாமி. கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

கொள்ளிடத்தில் விவசாய சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினா் சிங்காரவேலன் தலைமையில் கொள்ளிடத்தில் மறியலில் ஈடுபட்ட விவசாய தொழிலாளா் சங்கத் தலைவா் கேசவன், செயலாளா் சுந்தரலிங்கம், சிபிஐ ஒன்றிய செயலாளா் சிவராமன், இதேபோல, சீா்காழியில் சிபிஐ மாவட்ட செயலாளா் சீனிவாசன், விவசாய சங்கத் தலைவா் இமயவரம்பன் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com