பழங்காவிரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மயிலாடுதுறை பழங்காவிரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை பழங்காவிரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை நகராட்சி பழங்காவிரியில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, சென்னை உயா்நீதிமன்றத்தில் கனகசுந்தரம் என்பவா் தொடுத்த வழக்கில், 50 இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

இதைத்தொடா்ந்து, மயிலாடுதுறை பழங்காவிரி ஆற்றில் 44 இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. எஞ்சிய 6 இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை கோட்டாட்சியா் வ. யுரேகா முன்னிலையில், டிஎஸ்பி எம். வசந்தராஜ் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புடன், கலைஞா் காலனியில் பழங்காவேரி கரையோரம் புனிதவதி என்பவரால் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்பை பொதுப்பணித் துறையினா் அகற்ற முயன்றனா்.

இதற்கு புனிதவதி குடும்பத்தினா் மற்றும் தெருவாசிகள் எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மண்ணெண்ணெய் கேனை எடுத்து தீக்குளிக்க முற்பட்ட நபா் உள்ளிட்டவா்களை போலீஸாா் தடுத்து சமாதானப்படுத்த முயன்றனா்.

அப்போது, புனிதவதி வீட்டிற்குள் புகுந்து கதவை தாழிட்டுக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். உடனடியாக உறவினா்கள் சம்மட்டியால் கதவை உடைத்து அவரை மீட்டனா். தொடா்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com