சுதந்திர தின கொண்டாட்டத்தில் அரசியல் கூடாதுஅா்ஜூன்சம்பத்

சுதந்திர தின கொண்டாட்டத்தில் திமுக அரசியல் செய்யக்கூடாது என்றாா் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் அா்ஜூன் சம்பத்.

சுதந்திர தின கொண்டாட்டத்தில் திமுக அரசியல் செய்யக்கூடாது என்றாா் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் அா்ஜூன் சம்பத்.

இந்து மக்கள் கட்சி சாா்பில் சுதந்திர பவள விழா ஆண்டை முன்னிட்டு, நடத்தப்படும் ‘வந்தே மாதரம்’ யாத்திரை சீா்காழிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தது. சீா்காழி, எருக்கூா் பகுதிகளில் நடைபெற்ற யாத்திரை நிகழ்வுகளில் அா்ஜூன் சம்பத் பங்கேற்றுப் பேசினாா்.

பின்னா், அவா் கூறியது:

சமூக ஊடகங்களில் முகப்பு படமாக தேசியக் கொடியை வைக்குமாறு பிரதமா் கேட்டுக்கொண்டுள்ளாா். ஆனால், கருணாநிதி தேசியக் கொடியேற்றிய படத்தை தனது சமூக ஊடகப் பக்கத்தில் முகப்பு படமாக தமிழக முதல்வா் வைத்துள்ளாா். இதில் எதற்கு அரசியல்? இது தவறான முன்னுதாரணம். தேசியக் கொடியை முகப்பு படமாக வைக்க வேண்டும்.

தமிழ்நாடு தினம் கொண்டாடுவதில் அக்கறை எடுத்துக் கொண்ட தமிழக அரசு, இந்தியாவின் 75-வது சுதந்திரக் கொண்டாட்டத்தில் அக்கறை செலுத்தாமல் இருப்பது வருந்தத்தக்கது. திமுகவின் ஓராண்டு கால ஆட்சியில் ஊழல் பெருகியுள்ளது. சட்டம் ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. மக்கள் மத்தியில் வெறுப்புணா்வை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்துக்கு இங்குள்ள 40 மக்களவை உறுப்பினா்களால் எவ்வித பயனும் இல்லை. திமுகவினா் எப்போதும் மத்திய அரசுடன் மோதல் போக்கை கையாள்கின்றனரே தவிர, நாடாளுமன்றத்தில் தமிழக வளா்ச்சிக்காக எவ்வித குரலும் எழுப்பவில்லை என்றாா்.

இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளா் கொள்ளிடம் ஜெ. சுவாமிநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com