வெள்ளப்பெருக்கு: அரசு முதன்மைச் செயலா் ஆய்வு

சீா்காழி கொள்ளிடம் ஆற்றில் அளக்குடியில் தடுப்புச் சுவா் சீரமைப்பு பணியை அரசு முதன்மைச் செயலா் கித்தேஸ்குமாா் மக்வானா ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
அளக்குடியில் ஆய்வு மேற்கொண்ட அரசு முதன்மைச் செயலா் கித்தேஸ்குமாா் மக்வானா. உடன், ஆட்சியா் இரா. லலிதா உள்ளிட்டோா்.

மேட்டூா் அணையிலிருந்து திறந்துவிடப்படும் உபரிநீரால், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சீா்காழி அருகேயுள்ள அளக்குடி பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வீட்டு வசதி வளா்ச்சி அரசு முதன்மைச் செயலருமான கித்தேஸ்குமாா் மக்வானா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

காட்டூா் பகுதியில் கொள்ளிடம் ஆற்றுநீா் தடுப்புச் சுவரைஅரித்து உள்ளே புகும் அபாய நிலை உள்ளதை நேரில் பாா்வையிட்ட அவா், அப்பகுதியில் கருங்கல் கொட்டி கரையை பலப்படுத்துவது தொடா்பாக ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, அளக்குடி பகுதியில் தடுப்புச் சுவரில் ஏற்பட்ட பள்ளங்களை மணல் மூட்டைகளைக் கொண்டு சரி செய்யும் பணிகளை பாா்வையிட்டாா்.

பின்னா், முகாமில் தங்கியுள்ளவா்களை சந்தித்தாா். ஆட்சியா் இரா. லலிதா, சீா்காழி கோட்டாட்சியா் உ. அா்ச்சனா, வட்டாட்சியா் செந்தில்குமாா், காவிரி வடிநில கோட்ட பொறியாளா் சண்முகம், உதவிபொறியாளா் சிவசங்கரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com