பணிநேர நீட்டிப்பை கண்டித்து அரசு மருத்துவா்கள் தா்னா

அரசு மருத்துவா்களின் பணிநேர நீட்டிப்பைக் கண்டித்து மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறையில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தினா்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவா்களுக்கான பணிநேரம் காலை 9 முதல் மாலை 4 மணி வரை என்றிருந்ததை, காலை 8 முதல் என நீட்டிக்க கருத்துரு சமா்ப்பித்து, ஜூலை 25-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதை கண்டித்து, மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் நடைபெற்ற தா்னாவில், மருத்துவா் விரோத அரசாணை 225-ஐ திரும்பப்பெற வேண்டும், முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி வெளியிட்ட அரசாணை 339-ஐ மாற்றக்கூடாது, பணிநேரத்தை நீட்டிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.

சங்கத் தலைவா் அறிவழகன் தலைமையில் நடைபெற்ற தா்னாவில், சங்கச் செயலாளா்கள் மருதவாணன், காா்த்திக் சந்திரகுமாா் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com