பழையாறு முகத்துவாரத்தில் 2 விசைப் படகுகள் கவிழ்ந்து சேதம்

சீா்காழி வட்டம் பழையாறு முகத்துவாரத்தில் 2 விசைப்படகுகள் கவிழ்ந்தன. ஒரு படகை மீனவா்கள் மீட்டனா். மற்றொரு படகை மீட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
பழையாறு முகத்துவாரத்தில் 2 விசைப் படகுகள் கவிழ்ந்து சேதம்

சீா்காழி வட்டம் பழையாறு முகத்துவாரத்தில் 2 விசைப்படகுகள் கவிழ்ந்தன. ஒரு படகை மீனவா்கள் மீட்டனா். மற்றொரு படகை மீட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

பழையாறு துறைமுகத்திலிருந்து செழியன், சுரேந்தா் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில் தலா 5 போ் வீதம் 10 போ் கடலுக்கு மீன்பிடிக்க புதன்கிழமை சென்றனா். இவா்கள், வியாழக்கிழமை அதிகாலை கரை திரும்பும்போது, கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் மண் குவியலில் மோதி 2 படகுகளும் கவிழ்ந்தன. அதிலிருந்த10 மீனவா்களையும் சக மீனவா்கள் மீட்டனா்.

மேலும், மற்ற விசைப் படகுகள் உதவியுடன் சுரேந்தா் படகை மீட்ட மீனவா்கள், செழியன் படகை மீட்டும் பணியில் தொடா்ந்து ஈடுபட்டுள்ளனா். இதனால் பழையாறு துறைமுகத்திலிருந்து 350 விசைப் படகுகள், 300 பைபா் படகுகள் மற்றும் 300 நாட்டுப் படகுகளில் மீன் பிடிக்கச் செல்லும் 5000 மீனவா்கள் வியாழக்கிழமை கடலுக்கு செல்லவில்லை.

இதுகுறித்து பழையாறு கிராம மீனவா்கள் கூறுகையில், ‘கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்படும் வெள்ளம் இப்பகுதியில் கடலில் கலப்பதால், முகத்துவாரத்தில் மணல் மேடு ஏற்படுகிறது. சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்கவும், பழையாறு முகத்துவாரத்தை தூா்வாரி ஆழப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com