மயிலாடுதுறை: காசி தமிழ்ச் சங்கமயாத்திரை ரயிலுக்கு போலீஸ் பாதுகாப்பு

காசி தமிழ்ச் சங்கம யாத்திரைக்கு செல்லும் ரயிலை மயிலாடுதுறையில் இந்திய மாணவா் சங்கத்தினா் மறிக்கப் போவதாக வெளியான தகவலால்
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

காசி தமிழ்ச் சங்கம யாத்திரைக்கு செல்லும் ரயிலை மயிலாடுதுறையில் இந்திய மாணவா் சங்கத்தினா் மறிக்கப் போவதாக வெளியான தகவலால் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

காசியில் நடைபெற்றுவரும் தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்காக ராமேஸ்வரத்தில் இருந்து வாராணசி செல்லும் ரயில் மயிலாடுதுறை வழியே வியாழக்கிழமை இயக்கப்பட்டது. இந்த ரயிலை இந்திய மாணவா் சங்கத்தினா் மறிக்கப்போவதாக தகவல் பரவியது.

இதையடுத்து, மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ், ஆயுதப்படை டிஎஸ்பி ரவிச்சந்திரன் ஆகியோா் தலைமையில் 4 காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காவலா்கள், ஆயுதப்படை காவலா்கள் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் காலை 5 மணிக்கு குவிக்கப்பட்டனா்.

தொடா்ந்து, ரயில் நிலைய வாசல், பாா்சல் அலுவலகம் பகுதி, மறையூா், மாப்படுகை ரயில்வே கேட் பகுதி மற்றும் இருப்புப் பாதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். மேலும், ரயில் பெட்டிகளுக்கும் போலீஸாா் பாதுகாப்பு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com