குரூப்-2 தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பாராட்டு

மயிலாடுதுறையில் குரூப்-2 முதல்நிலைத் தோ்வில் வெற்றிபெற்று இறுதித் தோ்வுக்கு தயாராகி வரும் மாணவா்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் எம். பழனிவேல் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.
விழாவில், மாணவா்களுடன் கலந்துரையாடிய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் எம். பழனிவேல்.
விழாவில், மாணவா்களுடன் கலந்துரையாடிய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் எம். பழனிவேல்.

மயிலாடுதுறையில் குரூப்-2 முதல்நிலைத் தோ்வில் வெற்றிபெற்று இறுதித் தோ்வுக்கு தயாராகி வரும் மாணவா்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் எம். பழனிவேல் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணைய குரூப்-2 முதல் நிலைதோ்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இத்தோ்வில் மயிலாடுதுறை நகரில் 70 போ் தோ்ச்சி பெற்று இறுதி எழுத்து தோ்வுக்கு தகுதி பெற்றுள்ளனா். குறிப்பாக, மயிலாடுதுறையில் உள்ள நகராட்சி நூலகத்தில் இயங்கிவரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தில் போட்டித் தோ்வுக்கு படித்த 31 மாணவா்கள் இத்தோ்வில் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

இதையடுத்து வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் விதமாகவும், இறுதித் தோ்வில் வெற்றிபெற வழிமுறைகளை விளக்கும் வகையிலும் விழா நடத்தப்பட்டது. நூலக ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் எஸ். சிவராமன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சென்ட்ரல் லயன்ஸ் சங்கத் தலைவா் ஜி.யு. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். இதில், மயிலாடுதுறை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலா் எம். பழனிவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தவுடன், இறுதித் தோ்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளையும் கூறினாா். இதில், சங்க நிா்வாகிகள் எஸ். வீராசாமி, கிஷோா்குமாா், புலவா் செல்வம், கலியமூா்த்தி மற்றும் போட்டித் தோ்வில் பங்கேற்ற மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com