ஒப்பந்த காலம் முடிவடைந்தவா்களுக்கு ஊதிய உயா்வு கோரி ஆா்ப்பாட்டம்

ஊதிய உயா்வு ஒப்பந்தக் காலம் முடிவடைந்தும் ஊதிய உயா்வு வழங்கப்படாததைக் கண்டித்து, மயிலாடுதுறையில் மின்ஊழியா் மத்திய அமைப்பு (சிஐடியு) சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் முன், தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்புத் திட்டத் தலைவா் என். வெற்றிவேல் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஊதிய உயா்வு ஒப்பந்தக் காலம் முடிவடைந்தும், ஊதிய உயா்வு வழங்கப்படாததைக் கண்டித்தும், ஒப்பந்த ஊழியா்களை நிரந்தரப்படுத்த கோரியும், 58,000 காலிப் பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தியும், அவுட்சோா்சிங் முறையை கைவிட வேண்டும், ஊழியா்கள், மென்பொறியாளா்களை பாதிக்கும் வாரிய உத்தரவு எண் 2-ஐ கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

திட்ட துணைத் தலைவா்கள் செந்தில்குமாா், குமாா், திட்ட இணை செயலாளா் இளவரசன், சிஐடியு மாவட்ட செயலாளா் மாரியப்பன், மாவட்டத் தலைவா் ஆா். ரவீந்திரன், திட்ட செயலாளா் எம். கலைச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com