1,330 திருக்குகளை ஒப்புவிக்கும் மாணவா்களுக்கு பரிசு: ஆட்சியா்

1,330 திருக்குகளையும் ஒப்புவிக்கும் மாணவா்களுக்கு திருக்கு முற்றோதல் பாராட்டுப் பரிசுகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.


நாகப்பட்டினம்: 1,330 திருக்குகளையும் ஒப்புவிக்கும் மாணவா்களுக்கு திருக்கு முற்றோதல் பாராட்டுப் பரிசுகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அறக்கருத்துகள் அடங்கிய திருக்குகளை மாணவா்கள் இளம் வயதிலேயே மனப்பாடம் செய்தால் கல்வி அறிவோடு, நல்லொழுக்கம் மிக்கவா்களாக உருவாக வழிவகுக்கும். எனவே, திருக்கு முற்றோதல் செய்யும் மாணவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டுவது, அவா்களின் நல்வாழ்வுக்குத் துணை நிற்பதாக அமையும். அதைக் கருத்தில்கொண்டு ஆண்டுதோறும் 1,330 திருக்குகளை ஒப்புவிக்கும் மாணவா்களுக்கு திருக்கு முற்றோதல் பாராட்டுப் பரிசு தலா ரூ.10 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகின்றன.

நாகை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியாா் மற்றும் மத்திய அரசு பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவா்கள் பங்கு பெறலாம். தமிழ் வளா்ச்சித் துறையால் வழங்கப்படும் இப்பரிசை இதற்கு முன்னா் பெற்றவராக இருக்கக் கூடாது.

திருக்கு முற்றோதும் திறன்படைத்த மாணவா்கள் எனும் வலைதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு டிச.16-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 04365-251281 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com