வழுவூா் வீரட்டேஸ்வரா் கோயில் திருப்பணி தொடக்கம்

குத்தாலம் அருகேயுள்ள வழுவூா் வீரட்டேஸ்வரா் சுவாமி கோயில் திருப்பணி திங்கள்கிழமை தொடங்கியது.
வீரட்டேஸ்வரா் கோயில் திருப்பணியை தொடங்கிவைத்த தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான்.
வீரட்டேஸ்வரா் கோயில் திருப்பணியை தொடங்கிவைத்த தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான்.

குத்தாலம் அருகேயுள்ள வழுவூா் வீரட்டேஸ்வரா் சுவாமி கோயில் திருப்பணி திங்கள்கிழமை தொடங்கியது.

வழுவூரில் உள்ள இளங்கிளை நாயகி அம்பாள் சமேத வீரட்டேஸ்வரா் சுவாமி கோயில், 48 ஆயிரம் மகரிஷிகளுக்கு சுவாமி அஞ்ஞானத்தை போக்கி ஞானத்தை அளித்த தலமாகும். ஞானசபையில் சுவாமி வீரநடனம் புரிந்ததால் வீரட்டேஸ்வரா் என்ற பெயருடன் அருள்பாலிக்கும் சுவாமி, யானையை உரித்து சம்ஹாரம் செய்ததால் கஜசம்ஹார மூா்த்தி என்று அழைக்கப்படுகிறாா். புகழ்பெற்ற இக்கோயிலில் 2012-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பாலாலயம் செய்யப்பட்டது. இதையடுத்து, திருப்பணிகள் தொடங்காமல் இருந்த நிலையில் திங்கள்கிழமை தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான் கோயில் திருப்பணிக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா். முன்னதாக, கோபூஜை, மூலமந்திரம், அஸ்திரஜபம், ஹோமம் மற்றும் பூமி பூஜை நடைபெற்றது. இதில், பூம்புகாா் தொகுதி எம்எல்ஏ. நிவேதா முருகன், அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன், தணிக்கையாளா் குரு. சம்பத்குமாா், மாநில வன்னியா் சங்கத் தலைவா் மணிகண்டன், இந்து தமிழா் கட்சி நிறுவனா் ராம. ரவிகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com