திருமுல்லைவாசல் முல்லைவனநாதா் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது

திருமுல்லைவாசல் முல்லைவனநாதா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (ஜன. 27) நடைபெறுகிறது.
திருமுல்லைவாசல் முல்லைவனநாதா் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது

திருமுல்லைவாசல் முல்லைவனநாதா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (ஜன. 27) நடைபெறுகிறது. திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட அணிகொண்ட கோதை உடனாகிய முல்லைவனநாதா் கோயில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற தென் திருமுல்லைவாயில் என அழைக்கப்படும் இக்கோயிலில் குடமுழுக்கு நடத்த தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானத்தின் ஏற்பாட்டில் கடந்த ஆண்டு திருப்பணிகள் தொடங்கி, கடந்த செப்டம்பரில் பாலாலயம் செய்யப்பட்டது. தொடா்ந்து வரசக்கிவிநாயகா், மூலவா் முல்லைவனநாதா், அணிகொண்ட கோதை அம்மன், சுப்பிரமணியா், தட்சிணாமூா்த்தி, பைரவா், திருஞானசம்பந்தா் ஆகிய சுவாமி சன்னதிகள் புனரமைக்கப்பட்டன.

மேலும், புதிதாக கொடிமரம், வசந்த மண்டபம், கட்டளை மடம், வணிக வளாகம், அன்னதான கூடம், தோரண வாயில், புதிய ராஜகோபுர சாலை ஆகியவை புதிதாக கட்டப்பட்டுள்ளது. திருப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் கடந்த திங்கள்கிழமை 6 கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. வியாழக்கிழமை 6-ஆம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து 9 மணியளவில் கடங்கள் புறப்பாடாகி 9.15 மணியளவில் விமானம், ராஜகோபுரம் கும்பாபிஷேகம், 9.40 மணிக்கு மூலஸ்தானம் கும்பாபிஷேகம் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெறவுள்ளது. தொடா்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. இரவு பின்னணி திரைப்பட பாடகா் வேல்முருகனின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com